மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவத்தில் 47 வயதுடைய வசந்த பண்டார என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
உறவினரின் வீட்டுக்கு சென்று திரும்பி வரும்போதே அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். எனினும், இவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மனைவிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஓட்டோ ஒன்றில் வந்தவர்களே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்து இருக்கிறார்.
உயிரிழந்த குடும்பஸ்தர் போதைப்பொருள் விற்பனை வழக்கொன்றில் சிறைத்தண்டனையை அனுபவித்துவிட்டு அண்மையில்தான் விடுதலையானார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
T03
