பட்டாசு வெடித்ததில் ஒருவர் பலி

தம்புத்தேகம, தேக்கவத்த பிரதேசத்தில் பட்டாசு கொளுத்தச் சென்ற ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனது வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது இந்த விபத்து நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருமண நிகழ்ச்சியின்போது பட்டாசு ஒன்று வெடிக்காததால், மீண்டும் அதனை பற்றவைக்க முயன்றபோது, ​​பட்டாசு தீப்பிடித்து அவரது தலையில் பட்டதில் அவர் காயமடைந்துள்ளார்.

பலத்த காயமடைந்த 31 வயதுடைய அந்த நபர் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply