மன்னார் மாவட்டத்தில் இடம் பெறும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் மனநல நீதியான பிரச்சினைகள் தொடர்பில் கடந்த மூன்று வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் தொகுப்பு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமேலிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆய்வு, சிரேஸ்ட சமூக செயற்பாட்டாளர் பேதுரு பெனடிக்ற் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டு ஆய்வின் இறுதி முடிவு கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுத் தொகுப்பில், பெண்கள் மாவட்ட ரீதியாக எதிர்கொள்ளும் பால்நிலை சார் வன்முறைகள் தொடர்பிலும் பால்நிலை வன்முறைகள் தடுப்பு தொடர்பில் கையாளப்பட வேண்டிய அணுகுமுறை தொடர்பிலும் அறிக்கை இடப்பட்டுள்ளது.
T03
