இலங்கையில், ஒப்பீட்டளவில் மழைவீழ்ச்சி குறைந்துள்ள போதிலும், டெங்கு நோயின் தாக்கத்திலிருந்து நாடு இன்னும் விடுபடவில்லை எனப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHIU) எச்சரித்துள்ளது.
செய்தி நிறுவனம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்த சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கச் செயலாளர் இந்துனில் போபிட்டிய, அடுத்த இரண்டு மாதங்களில் மழை எதிர்பார்க்கப்படுவதால், ஓகஸ்ட் மாதம் வரையில் டெங்கு அபாயம் தொடரும் எனத் தெரிவித்திருந்தார்.
நாட்டில் நுளம்புகள் பெருகுவதற்குரிய இடங்கள் அதிகளவில் உள்ளதாகவும், இதனால் நுளம்புகள் அதிகளவில் பரவ வாய்ப்புண்டு எனவும், அதிகளவில் நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, டெங்குவைத் தடுக்கும் வகையில் மக்கள் தமது சுற்றுப்புறங்களைச் சுத்தமாக வைத்திருக்குமாறு பொபிட்டிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
T01