தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

நாட்டில் இன்று(31) தங்கத்தின் விலை சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் கொழும்பு செட்டியார் தெரு தங்க வர்த்தக நடவடிக்கைகளுக்கு அமைவாக 22 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு இலட்சத்து 49 ஆயிரம் ரூபாவாகவும் 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு இலட்சத்து 61 ஆயிரம் ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுள்ளது.

22 கரட் தங்கம் ஒரு பவுண் கடந்த வாரம் ஒரு இலட்சத்து 54 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதோடு 24 கரட் தங்கம் ஒரு பவுண் கடந்த 26 ஆம் திகதி,ஒரு இலட்சத்து 67 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply