ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு..! கல்வி அமைச்சர் உறுதிமொழி

கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வினை வழங்குவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்துள்ளார்.

கல்வி அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில், கிழக்கு மாகாணத்தில் 4 ஆயிரத்து 200 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும், அதற்கு நிரந்தர தீர்வினை காண்பதற்காக ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இக் கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதாக கல்வி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இதற்கமைய முதற்கட்டமாக மூன்று மாத காலத்திற்குள், கல்வியியற் கல்லூரியில் இருந்து வெளியேறும் ஆசிரியர்களைக் கொண்டு பற்றாக்குறை உள்ள பாடசாலைகளுக்கு நியமனம் வழங்குவதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply