இறைவரித் திணைகளாகத்தால் புதிய விதி

வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், வங்கிகள், கட்டிடக்கலை வல்லுநர்கள் என பல துறைகளில் ஈடுபடுபவர்கள் இன்று முதல் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவிப்பின்படி, உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட வேண்டிய நபர்கள் தொடர்பான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்த வைத்தியர்கள்
இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவகத்தின் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள்
இலங்கையின் சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவகத்தின் உறுப்பினர்கள்
இலங்கை பொறியியல் நிறுவனத்தின் உறுப்பினர்கள்
இலங்கை வங்கியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள்
இலங்கை கட்டிடக் கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள்
இலங்கையின் அளவு ஆய்வாளர்கள் நிறுவனத்தின் உறுப்பினர்கள்
உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்
பிரதேச செயலாளரின் கீழ் வணிகங்களை பதிவு செய்த நபர்கள்
மோட்டார் வாகனத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களைக் கொண்ட நபர்கள் தவிர முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள் பயன்பாட்டாளர்கள் மற்றும் கை உழவு இயந்திரங்கள்

அத்துடன் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி 18 வயதை நிறைவு செய்தவர்கள் அல்லது 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி அல்லது அதற்குப் பிறகு 18 வயதை நிறைவு செய்யும் அனைத்து நபர்களும் இந்த புதிய விதிக்கு உட்பட்படுத்தப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply