இறக்குமதி செய்யப்படும் உலர் மீன்கள், பழங்களில் ஈயம் மற்றும் ஆசனிக் போன்ற கனரக உலோகங்கள் உள்ளதா, என இன்று முதல் சோதனை நடத்துவதை இலங்கை அரசு கட்டாயமாக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2021 மற்றும் 2022 க்கு இடையில் சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இறக்குமதி செய்யப்பட்ட உலர் மீன்கள், பழங்களில் கன உலோகங்கள், குறிப்பாக ஈயம் மற்றும் ஆசனிக் ஆகியன அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கணக்கெடுப்பின்படி, சில இறக்குமதி செய்யப்பட்ட பழங்களில் ஆபத்தான அளவு ஈயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் உலர் மீன்கள், பழங்களில் உள்ள கன உலோகங்கள் மற்றும் ஆசனிக் அளவு அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச அளவைவிட அதிகமாக இல்லை என்பதை உறுதிப்படுத்துமாறு உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு இறக்குமதியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக உணவுக் கட்டுப்பாட்டு நிர்வாகப் பிரிவினால் விசேட தொடர்பு எண் 0112112718 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
T03
