ஆடுகளுக்கான காப்புறுதித் திட்டம் அறிமுகம்!

விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையானது வெள்ளாடுகளுக்கான காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் டபிள்யூ.எம்.பி.வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஓர் ஆட்டின் மதிப்பு பொதுவாக 100,000 ரூபா எனவும், ஆடுகளின் காப்பீட்டிற்கு ஆண்டுக்கு 400 ரூபாவினைத் தவணைப் பணமாக செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, ஆடு திருடப்பட்டாலோ திடீரென உயிரிழந்தாலோ இழப்பீடு வழங்கப்படும் எனவும் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோருக்கு அடுத்த ஐந்து வருடங்களுக்குள் 70,000 ஆடுகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply