தனியார் பேருந்து கட்டணத்தில் மாற்றம்

ஜூலை மாதம் நடைபெறும் பேருந்து கட்டண மீளாய்வின்போது பேருந்து கட்டணத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இம்முறை எரிபொருள் விலை திருத்தத்தில் டீசல் விலையில் குறைப்பு இல்லையென்றாலும் கடந்த மாதம் டீசல் விலை குறைக்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு பேருந்து கட்டணத்தை மாற்ற தயாராக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதை தெரிவித்தார். 15 ரூபாவினால் டீசல் விலை குறைக்கப்பட்ட பயனை மக்களுக்கு வழங்க எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் பொருட்களின் விலைகள், உதிரிப்பாகங்களின் விலைகள் மற்றும் இதர பொருட்களின் விலைகள் கணக்கிடப்பட்டு, ஜூலை முதலாம் திகதி முதல் பேருந்து கட்டணங்கள் மாற்றம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply