நேட்டோவில் இணையும் முக்கிய நாடுகள் – வெளியானது அறிவிப்பு!

நேட்டோவில் சுவீடன் விரைவில் இணையும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிப்பு விடுத்துள்ளார்.

இதற்கான பேச்சுவார்த்தை முன்னரே முடிவுற்ற நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த ஆண்டு மே மாதம் 18ம் திகதி சுவீடனுடன் சேர்ந்து நேட்டோவில் இணைய உள்ளதாக பின்லாந்து, அமெரிக்காவிடம் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திட்டடிருந்தது.

இதனை பரிசீலித்த அமெரிக்கா, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29ம் திகதி இதற்கான அதிகாரபூர்வ அழைப்பை விடுத்திருந்தது.

மேலும் ஜூலை மாதம் 4ம் திகதி பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் இதற்கான பேச்சுவார்த்தையும் இடம்பெற்றிருந்தது.

பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற மறு நாளே, நேட்டோ கூட்டங்களில் கலந்துகொள்ளும் அதிகாரபூர்வ அழைப்பாளர்களாக சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் செயற்படும் எனத் தெரிவித்து கைச்சாத்திடப்பட்டது.

இந்த பின்னணியில் தான் ஸ்வீடன் விரைவில் நேட்டோவில் இணையும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிப்பு விடுத்துள்ளார்.

2ம் உலகப்போருக்கு பின்னர் பிரிட்டன் பலவீனமடைந்து அமெரிக்கா பலமடைந்தது.

இந்நிலையில் சோவியத் ரஷ்யாவை எதிர்ப்பதற்கு 1949ம் ஆண்டு அமெரிக்கா உருவாக்கிய ஒரு அமைப்புதான் ‘நேட்டோ’.

இது பிரிட்டன், பெல்ஜியம், லக்ஸம்பர்க், போர்த்துக்கல், கனடா, டென்மார்க் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுடன் தொடங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply