யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் மாபெரும் மென்பந்து துடுப்பாட்டப் போட்டி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில், சற்று முன்னர் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இப் போட்டி, இன்றும் நாளையும் (03, 04) இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த போட்டியில், பிரதம விருந்தினராக திரு.சண் தயாளன் கலந்துகொண்டுள்ளார்.
குறித்த போட்டியில், முதலாம் இடத்தைப் பெறும் அணிக்கு 20,000 ரூபாய் பணப் பரிசும், இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொள்ளும் அணிக்கு 10,000 ரூபாய் பணப் பரிசும் வழங்கப்படவுள்ளன.
குறித்த நிகழ்வில், அனைத்து பழைய மாணவர்களையும் கலந்துகொள்ளுமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
