இருதரப்பு பாதுகாப்புத் தொடர்பில் சீனாவிற்கு அமெரிக்கா விடுத்துள்ள வலியுறுத்தல்!

அமெரிக்கவுடன், இருதரப்பு பாதுகாப்பு விவகாரம் குறித்து பேசுவதற்கு சீனா விரும்பாதமை தொடர்பில் அமெரிக்கா கவலை அடைவதாக  செய்தி வெளியாகியுள்ளது.

இருதரப்பு மோதலைத் தவிர்ப்பதற்கு பேச்சுவார்த்தைகள் முக்கியம் என்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார்.

தாய்வான் விவகாரம் மற்றும் தென் சீனக் கடலில் உள்ள பிராந்திய மோதல்கள் வரை அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு பல தசாப்தங்களாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆசிய-பசிபிக் பகுதியில் மோதலை தவிர்க்கவும் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கவும் இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் இராணுவத் தலைவர்களுக்கு இடையேசந்திப்பு அவசியம் என லொயிட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார்.

எவ்வளவு அதிகமாக இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றோமோ அந்தளவுக்கு நெருக்கடி அல்லது மோதலுக்கு வழிவகுக்கும் தவறான புரிதல்கள் மற்றும் எண்ணங்களை தவிர்த்துக்கொள்ள முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply