இலங்கையில் டெங்கு பாதிப்பு 4000 கடந்துள்ளது

இலங்கையில் 2023 ஆம் ஆண்டு பதிவாகியிருந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 40,000 ஐக் கடந்துள்ளது.

தொற்றுநோயியல் பிரிவின் படி, இந்த வருட ஆரம்பம் முதல்  இன்று வரை மொத்தம் 40,206 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் கம்பஹா மாவட்டத்திலேயே 8,970 வழக்குகள் பதிவாகியுள்ளதுடன் மேல் மாகாணத்தில் 20,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன இது மாகாணங்களின் அடிப்படையில் மிக அதிகமாகும்.

மேலும், டெங்கு நோய் அபாயம் உள்ள 60 பகுதிகளை  பொது சுகாதார வைத்தியசாலை தொற்றுநோயியல் பிரிவு அடையாளம் கண்டுள்ளது.

மே மாதத்தில் 9,290 டெங்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இது ஜனவரி 2023 முதல் அதிக மாதாந்திர தொற்றுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில், ஜனவரி 2023 முதல் மொத்தம் 25 இறப்புகளும் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்குமாறும் நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை அழிக்குமாறும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply