உலக சுற்றாடல் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.
இதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்ட போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் ஏற்பாட்டில், பிளாஸ்ரிக் மாசுபாட்டுக்கு எதிராக செயற்படுவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
மத்திய சுற்றாடல் அதிகாரசபை,போரதீவுப்பற்று பிரதேசசபை, வெல்லாவெளி பொதுச்சுகாதார வைத்திய அலுவலகம் ஆகியன இணைந்து இன்று காலை பட்டிருப்பு பாலத்தில் இருந்து பெரியபோரதீவு சந்திவரையான பகுதிகுட்பட்ட வீதியோரங்களிலுள்ள குப்பைகளை அகற்றும் பணியினை முன்னெடுத்ததோடு, மரக்கன்றுகளையும் நாட்டினர்.
போரதீவுப்பற்று பிரதேசசபையின் செயலாளர் வி.கௌரிபாலன், மட்டக்களப்பு மாவட்ட சுற்றாடல் உத்தியோகஸ்தர் ம.சதிஸ்குமார், வெல்லாவெளி பொதுச்சுகாதார பரிசோதகர் கு. குபேரன் மற்றும் பிரதேசசபை உத்தியோகஸ்தர்கள் ஊழியர்கள் ஆகியோர் குறித்த பணியில் கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்வில் வீதிகளில் குப்பைகளை வீசுவது தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.