ஸ்ரீலங்க மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர , அமெரிக்காவின் திறைசேரியின் பிரதி உதவிச் செயலாளர் ரொபேர்ட் கப்ரோத்துடன் இலங்கையின் தற்போதைய எரிசக்தி துறையின் சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடமைகள் குறித்து நேற்று கலந்துரையாடியிருந்தார்.
கடந்த 12 மாதங்களில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம், விலைச் சீர்திருத்தங்களினால் ஏற்பட்டுள்ள சவால்கள், இலங்கை மின்சார சபையின் (CEB) இருப்புநிலை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC), உத்தேச புதிய மின்சார சட்டம் மற்றும் மின்சாரத் துறைக்கு தேவையான உதவிகள் மற்றும் மறுசீரமைப்புத் தொடர்பிலும் அதன் போது, கவனம் செலுத்தப்பட்டது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் துணைத் தூதுவர் டக் சோனெக், ஜெரோட் மேசன், அமெரிக்க கருவூலத்தின் சர்வதேச நாணயக் கொள்கையின் இயக்குனர், பில் பிளாக், கருவூல இணைப்பாளர், கிறிஸ் பவர்ஸ், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான USAID தலைவர், மற்றும் அமெரிக்க தூதரகத்தின் பொருளாதார அதிகாரி டேனியல் மூன் ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.