கம்பளையில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது

கம்பளையில் 2.0 ரிச்டர் அளவில் சிறிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 10.49 மணியளவில் சிறு அதிர்வு ஏற்பட்டதாக பணியகம் தெரிவித்துள்ளது.

மஹகனதராவ, ஹக்மன, பல்லேகல மற்றும் புத்தங்கல ஆகிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள நில அதிர்வு மீட்டர்களிலே குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply