ஊடகங்களை தணிக்கை செய்து மக்களை ஒடுக்க முயற்சிக்கும் அரசாங்கம்!

சுயாதீன ஆணைக்குழுவுக்கு தேர்தலை நடத்த சந்தர்ப்பம் வழங்காத அரசாங்கமே இலங்கையில் காணப்படுகின்றது என தேசிய மக்கள் சக்தி கடுமையாக விமர்சித்துள்ளது.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு என்ற ஒன்றை ஏற்படுத்தி, அதற்கு அங்கத்தவர்களை நியமித்தும் அதற்கு சந்தர்ப்பம் வழங்காதமை ஜனநாயக விரோத செயல் என  தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“ஊடகங்களை தணிக்கை செய்வதற்கான அதிகாரத்தை, அதிகாரிகளுக்கு வழங்கி, மக்களின் தகவல் அறியும் சந்தர்ப்பத்தை ஒடுக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் ஐவரே உத்தேச ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் ஜனாதிபதியின் தாளத்துக்கு ஆடும் பொம்மைகளாகவே செயற்படுவார்கள்.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே சுதந்திரமாக செயற்பட முடியவில்லை என்றால், அங்கத்தவர்களை நியமிப்பதற்கும் நீக்குவதற்கும் ஜனாதிபதிக்கு ஏகோபித்த அதிகாரமுள்ள உத்தேச உழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் என்ன செய்யமுடியும்?

ஊடகங்களை தணிக்கை செய்வதற்கான அதிகாரத்தை வழங்கி, மக்களின் தகவல் அறியும் சந்தர்ப்பத்தை ஒடுக்கும் இந்த முயற்சியை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply