தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (6) நள்ளிரவில் படிப்படியாக புயலாக உருவாகி வடமேற்கு திசையை நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக் கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரையில் வீசக்கூடும் அத்தோடு காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 75 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் தொழிலுக்கு செல்லும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் உடனடியாக கரைக்கு அல்லது பாதுகாப்பான இடத்திற்கு வருமாறும் இன்று (06) பிற்பகல் 2.30 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
