கரீபியன் நாடான ஹைதியில், கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கிடையில், திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த நாட்டின் ஜெரெமீ நகருக்கு அருகே 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.9 ரிச்டர் அளவு பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கத்தினால் பல வீடுகள் இடிந்து விழுந்து சேதமாகியுள்ளதுடன், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு புலம்பெயர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும்,தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் உண்டான வெள்ளத்தில் சிக்குண்டு 42 பேர் இறந்துள்ளதுடன் பலர் காணமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.