இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மீது பல வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத்தாக்குதல் தெடர்பில் சரத் பொன்சேகா கருத்துத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2006 ஆண்டு கோட்டபய ரஜபக்ஸ மீது நடத்தப்பட்ட தற்கெலைக் குண்டுத்தாக்குதல் எந்த பயங்கரவாத அமைப்பாலும் மேற்கொள்ளப்படவில்லை என முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
குறித்த குண்டு தாக்குதலை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
ஆனால் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் திட்டமிட்ட இலக்கில் இருந்து 25 மீற்றர் தொலைவில் தற்கொலை தாக்குதலை நடத்துவதற்கான வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
2006ஆம் ஆண்டு ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் சர்வதேசத்தின் அனுதாபத்தை பெறுவதற்காக முன்னெடுக்கப்பட்ட சதிவேலை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2006 ஆம் ஆண்டு பாதுகாப்புச் செயலாளராக, கோட்டாபய ராஜபக்ஸ செயற்பட்ட போது, அவர் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல், திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது.
இது அப்போதைய ஆளுங்கட்சியால் திட்டமிட்டு நடத்தப்பட்ட உள் வேலைத்திட்டமாகும்.
2006 ஆம் ஆண்டு கொழும்பில் நடந்த குறித்த குண்டுத் தாக்குதலில் இருந்து கோட்டாபய காயமின்றி உயிர் தப்பினார்.
குறித்த தாக்குதல் நடந்த உடனேயே, தமிழீழ விடுதலைப்புலிகளுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்துமாறு, நடுநிலை வகித்து பேச்சுவார்தைகளில் ஈடுபட்டிருந்த நோர்வே அரசாங்கத்தை இலங்கை கேட்டுக் கொண்ட நிலையில் நோர்வே அரசாங்கம் பின்வாங்கிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.