இறந்ததாகக் கருதப்பட்ட மகனை பிணவறையிலிருந்து உயிருடன் மீட்ட தந்தை

அண்மையில், ஒடிசாவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இறந்து விட்டதாக அறிவக்கப்பட்ட தனது மகனைத் தேடி 230 கிலோமீற்றர் பயணம் செய்த தந்தை, பிணவறையில் இருந்து தனது மகனை உயிருடன் மீட்டுள்ள நிலையில், தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது..

கடந்த 2 ஆம் திகதி ஒடிசா மாநிலம் பாலசோரில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகியதில் 275-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதையடுத்து, அந்த ரயில்களில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தினர், தங்களுடைய உறவுகளை இனங்கண்டுகொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.

அந்தவகையில், மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் சிறிய கடை நடத்தி வரும் ஹெலராம் மாலிக் என்பவரின் 24 வயதுடைய மகனான விஸ்வஜித் கொல்கத்தாவிலிருந்து புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார்.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும், ஹெலராம் தனது மகன் விஸ்வஜித்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, தான் உயிருடன் இருப்பதாகவும் ஆனால் படுகாயம் அடைந்திருப்பதாகவும் உடைந்த குரலில் விஸ்வஜித் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மகனை தேடி வந்த தந்தை, மகனை பிணவறையில் பார்த்தபோது, மகன் உயிருடன் இருப்பது தெரியவந்ததை அடுத்து பிணவறையிலிருந்து மீட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply