ராஜங்கனை சத்தாரதன தேரருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படடுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 21 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்ததன் பின்னரே கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், ராஜங்கனை சத்தாரதன தேரர் கடந்த 28 ஆம் திகதி இரவு அநுராதபுரம், ஸ்ராவஸ்தி பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் விசாரணைகளை அடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
அதன் போது வழக்கை விசாரணை செய்த நீதவான், ஜூன் மாதம் 7 ஆம் திகதி அதாவது இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
அதனையடுத்து, குறித்த வழக்கு விசாரணை இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.