அருட்தந்தை பொப் பிரான்சிஸ், வயிற்று அறுவை சிகிச்சைக்காக, இன்று பிற்பகல், ரோம் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளார்.
குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவுள்ள அவர், பல நாட்கள் மருத்துவமனையில் தங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என வத்திக்கான் செய்திகள் தெரிவிக்கின்றன.
குடலிறக்கம் காரணமாக, தொடர்ச்சியான வலி ஏற்பட்டதாகவும், அது மோசமடைந்து வருவதாகவும் வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி கூறினார்.
86 வயதான அவர் சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகவும், முழங்கால் நோயின் காரணமாக, தொடர்ந்து சக்கர நாற்காலியைப் பயன்படுத்துகிறார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.