க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் இன்றுடன் முடிவடையும் நிலையில், , அனைத்து பரீட்சை நிலையங்களிலும் டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பல முன்னணி பாடசாலைகளில், ஏறக்குறைய 40 மாணவர்களுக்கு டெங்கு நோய் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள கறுவாத்தோட்டம் மற்றும் புறநகர் பகுதிகள் உட்பட பல்வேறு முன்னணி பாடசாலைகளில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் காணப்பட்டனர்.
க.பொ.த (சா/த) பரீட்சைகள் மே 29 ஆம் திகதி 3,568 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாகின.
இதற்கிடையே, ஜூன் இறுதிக்குள் க.பொ.த சாதாரண தர செயன்முறைப் பரீட்சைகளை முடித்து, ஆகஸ்ட் மாதத்திற்குள் தேர்வு முடிவுகளை வெளியிடத் பரீட்சைகள் திணைக்களம் எதிர்பார்க்கிறது.