2020 ஆம் ஆண்டு முதல் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் கையிருப்பு இன்னமும் அப்படியே இருப்பதாகவும் அதனை அழிப்பது தொடர்பில் பெரும் சிக்கல் எழுந்துள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு துறை கண்காணிப்பு குழுவில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.
கைப்பற்றப்பட்ட ஹெரோயின் கையிருப்புகளை 1000 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் எரிக்க வேண்டும் என்றும், ஆனால் அதற்கான இடம் இல்லாத காரணத்தால் ஹெரோயின் கையிருப்பு சேகரிக்கப்படுவதாகவும் கமால் குணரத்ன மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த ஹெரோயின் கையிருப்புகளை ஆழ்கடலில் மூழ்கடிக்க முடியும் என்றும், ஆனால் அதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
