இன்று (8) வியாழக்கிழமைக்கான நாணய மாற்று விகித அறிக்கையை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 285 ரூபா 69 சதமாகவும் விற்பனை விலை 298 ரூபா 91 சதமாகவும் இன்று பதிவாகியுள்ளது.
அத்துடன், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் விலை 354 ரூபா 87 சதமாகவும் விற்பனை விலை 373 ரூபா 39 சதம் எனவும் பதிவாகியிருக்கிறது .
மேலும், யூரோ ஒன்றின் கொள்முதல் விலை 304 ரூபா 36 சதம் என்றும் அதன் விற்பனை விலை 321 ரூபா 63 சதம் எனறும் பதிவாகியிருக்கின்றது.
இவைதவிர, கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 212 ரூபா 36 சதம் – விற்பனை பெறுமதி 225 ரூபா 10 சதம், அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 189 ரூபா 3 சதம் – விற்பனை பெறுமதி 200 ரூபா 82 சதம், சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 210 ரூபா 73 சதம் – விற்பனை பெறுமதி 223 ரூபா 8 சதம் என்றும் இன்று பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.