திடீர் பதவி விலகலை அறிவித்துள்ள கனேடிய அதிகாரி!

தேர்தல் குறுக்கீடுகள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட கனேடிய அதிகாரி, தன் மீது எழுந்த எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை மேற்கோள் காட்டி தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார்.

81 வயதான டேவிட் ஜான்ஸ்டன், 2019 மற்றும் 2021 இல் கனடாவின் கூட்டாட்சித் தேர்தல்களில் சீன தலையீடு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையில், நேற்று , கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எழுதிய கடிதத்தில், இந்த மாத இறுதிக்குள் தான் பதவியிலிருந்து விலகப் போவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அவரின் நியமனத்தின் பின்னர், அவரது நியமனம் மீதான ஆய்வு தீவிரமடைந்ததோடு, எதிர்கட்சிகள் அவர் பாரபட்சமாகச் செயற்படுவதாகக் குற்றம் சாட்டியதை அடுத்தே, டேவிட் ஜான்ஸ்டன் பதவி விலக தீர்மானித்துள்ளார்.

 

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply