தொல்பொருள் இடமொன்றுக்கு காணி ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினை தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளைக் கடுமையாக சாடியுள்ளார்.
ஜனாதிபதி தொல்பொருள் திணைக்கள அதிகாரியிடம் “நீங்கள் எனக்கு வரலாற்றை கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நான் உங்களுக்கு கற்பிக்க வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பினார்.
ஜனாதிபதி மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே, இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறித்த தொல்பொருள் இடத்திற்காக சுமார் 270 ஏக்கர் காணியை கைப்பற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தொல்பொருள் திணைக்கள அதிகாரி தெரிவித்த போது, அது மகா விகாரையை விட பெரியதா? என ஜனாதிபதி அவரிடம் கேட்டார்.
மேலும்,உங்களுக்கு ஏன் 275 ஏக்கர் தேவை? இது மகாவிகாரையை விடப் பெரியதா? மகா விகாரை, ஜேதவனாராமயம் மற்றும் அபயகிரி விகாரை ஆகிய மூன்றுமே 100 ஏக்கரை எடுக்காது- என்றார்.