ஸ்கொட்லாந்தின் முன்னாள் முதலமைச்சர் நிகோலா ஸ்டர்ஜன் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
8 வருடங்களாக அவர் தலைமை தாங்கிய அரசியல் கட்சியின் நிதி தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகவே அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் கைது செய்யப்பட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் மாலை 5 மணியளவில் அவர் விடுவிக்கப்பட்டார் எனவும் ஸ்கொட்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் முன்னாள் தலைவரும் ஸ்கொட்லாந்தின் முன்னாள் முதலமைச்சருமான 52 வயதான நிகோலா ஸ்டர்ஜன் கடந்த மார்ச் மாதம் மேற்படி பதவிகளிலிருந்து நிகோலா ஸ்டர்ஜன் இராஜிநாமா செய்தார்.
பிரிட்டனிடமிருந்து ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் பெறுவதற்கான பிரச்சாரங்களுக்காக தனது ஆதராளர்களிடமிருந்து எஸ்என்பி கட்சி திரட்டிய சுமார் 600,000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் நிதிக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான விசாரணையில் நிகோலா கைது செய்யப்பட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டில் இது தொடர்பான விசாரணையை ஸ்கொட்லாந்து பொலிஸார் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
