கனடாவின் கியூபெக் மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ, ஒரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 72 ஆக இருந்த தீப்பரவல் சம்பவங்கள் தற்போது 44 ஆகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கனடாவில் ஏற்பட்ட காட்டுத் தீயானது அண்டை நாடுகளான அமெரிக்கா, ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகிய நாடுகளையும் பாதித்திருந்தது.
குறித்த நாடுகளைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்களின் கூட்டு முயற்சியானது தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உதவும் எனக் குறிப்பிடப்படுகின்றது.
மேலும்,வெப்பமான காலநிலை காணப்படுவதால், காட்டுத் தீ அதிகரிக்கும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.