ஆப்கானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி : முதல் நாளில் 362 ஓட்டங்கள் குவித்தது பங்காளதேஷ்

பங்காளதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று (14) புதன்கிழமை ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தலைவர் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்காளதேஷ் அணி தொடக்க நாளில் 79 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 362 ஓட்டங்கள் குவித்தது.

பங்காளதேஷ் அணிக்காக தனது 3-வது சதத்தை அடித்த நஜ்முல் ஹூசைன் ஷன்டோ 146 ஓட்டங்களும் (175 பந்து, 23 பவுண்டரி, 2 சிக்சர்), மமுதுல் ஹசன் ஜாய் 76 ஓட்டங்களும் அதிகபட்சமாக பெற்று ஆட்டமிழந்தனர்.

நேற்றைய முதல் நாள் முடிவில் முஷ்பிகுர் ரஹிம் 41 ஓட்டங்களுடனும் மெஹதி ஹசன் மிராஸ் 43 ஓட்டங்களுடனும் களத்தில் இருக்கிறார்கள்.

இந்நிலையில், 2-வது நாள் போட்டி இன்று இடம்பெறுகின்றது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply