பிலிப்பைன்ஸின் பிரதான தீவில் 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடலில், 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்திற்குப் பின்னர், உயிரிழப்புக்களோ, பெரியசேதங்களோ ஏற்படவில்லை எனவும், அருகிலுள்ள மாகாணங்களில் சிறிதளவு நிலநடுக்கம் உணரப்பட்டது எனவும் பிலிப்பைன்ஸ் நில அதிர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக மணிலாவில் உள்ள மூன்று ரயில் பாதைகளின் செயற்பாடுகளும், விமான நிலையங்களின் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.