இந்திய மாநிலம் மணிப்பூரில் தொடர்ந்து இடம்பெற்று வரும்
த்தில் மேலும் 11 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மே மாதம் அரசு வேலை மற்றும் கல்வி இடஒதுக்கீடு தொடர்பில் மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தீஸ் ஆகிய இரு இனக்குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது.
இந்த மோதல் கலவரமாக மாறியதைத் தொடர்ந்து மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக அமைதியின்மை நிலவுகிறது.
இந்நிலையில் இம்பாலின் கிழக்கு மாவட்டத்தில் உள்ள காமன்லோக் பகுதியில் நேற்றிரவு தாக்குதல் நடந்துள்ளது.
இதில் கிராம மக்கள் 11 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் காயமடைந்த பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் காயமடைந்தவர்களில் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
இதற்கிடையில், அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறையில் உள்ள காவலர்களுக்கு மீண்டும் பணியில் சேர அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.