தனது திருமணத்திற்காக இந்தியாவிற்கு செல்ல இருந்த நிலையில் லண்டனில் இளம் பெண் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் ஐதராபாத்தை சேர்ந்த 27 வயதுடைய தேஜஸ்வினி என்பவரே இவ்வாறு கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டவராவார்.
லண்டனில், மேற்படிப்பை நிறைவு செய்த குறித்த பெண், அடுக்குமாடி குடியிருப்பொன்றில் சக பெண்ணுடன் தங்கியிருந்து தற்காலிகமாக வேலைக்குச் சென்று வந்துள்ள நிலையில், அவர்களுடைய வீட்டிற்குள் கத்தியுடன் நுழைந்த பிரேசில் நாட்டை சேர்ந்த கெவன் அன்டோனியோ என்னும் 23 வயதுடைய ஆண் இரு பெண்களையும் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
சம்வத்தை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார், மற்றைய பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்
கொலை செய்து விட்டு தப்பியோடிய அந்த இளைஞரையும், மற்றுமொரு இளைஞரையும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மகள் இறந்த செய்தியைக் கேட்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இதையடுத்து, அவரது உடலை ஐதராபாத்துக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.