இறைச்சிக் கடைகளை திடீர் சோதனைக்கு உட்படுத்தவும்! டக்ளஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை

பிரதேசத்தில் உள்ள இறைச்சிக் கடைகள் மற்றும் உணவகங்களை திடீர் சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொதுச் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கால்நடைகள் திருடப்பட்டு இறைச்சிக்கு வெட்டப்படுவதை தடுக்கும் நோக்கிலேயே குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்கள் தொடர்பாக இன்று (15) இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

ஊர்காவற்றுறை பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளப்படுத்தி, விரிவாக ஆராய்ந்து தீர்வுகாணும் நோக்கில் இடம்பெற்ற இந்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் போக்குவரத்து, விவசாயம், கால்நடை, குடிநீர் விநியோகம், கடற்றொழில் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டன.

குறிப்பாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற காரைநகர் – ஊர்காவற்றுறைக்கு இடையிலான கடல் பாதை பழுதடைந்து இருப்பதனால், அதனை திருத்தி சேவையில் ஈடுபடுத்தும் வரையில், தனியார் படகுகளை வாடகைக்கு அமர்த்தி பொது மக்களுக்கான போக்குவரத்து சேவையை மேற்கொள்ளுமாறு டக்ளஸ் தேவானந்தாவினால் வீதிப் போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு பணிக்கப்பட்டுள்ளது.

அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த சேவை இடம்பெறுவதை உறுதிப்படுத்துமாறு பிரதேச செயலாளரையும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply