ரணிலின் வெளிநாட்டுப் பயணம் – நிதி மற்றும் பாதுகாப்பு பதில் அமைச்சர்கள் நியமனம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியா மற்றும் பிரான்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வரை, பதில் நிதி  அமைச்சராக ஷெஹான் சேமசிங்க மற்றும் பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரேமித பண்டார தென்னகோன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி, உயர்மட்ட தூதுக்குழுவினருடன் இன்று அதிகாலை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான விமானத்தில் புறப்பட்டார்.

ஜனாதிபதி, பிரான்ஸில் தங்கியிருக்கும் போது, இலங்கையின் கடன் நெருக்கடி தொடர்பான விடயங்கள் தொடர்பில் விவாதிப்பதற்காக பரிஸ் கிளப் உறுப்பினர்களை சந்திப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில் பிரான்ஸிற்குச் சென்ற ஜனாதிபதி, பாரிஸில் நடைபெறவுள்ள புதிய உலகளாவிய நிதிய ஒப்பந்தத்திற்கான உலகளாவிய தலைவர்களின் உச்சி மாநாட்டு, உயர்மட்டக் குழு விவாதத்தில் உரையாற்றுவார்.

இந்த நிகழ்வு ஜூன் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் பரிஸில் உள்ள பாலைஸ் ப்ரோங்னியார்ட்டில் நடைபெற உள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply