மத்துகம, பெலவத்தை நகரின் மத்தியில் குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பெலவத்த, மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பெலவத்தை நகர மத்தியில் உள்ள மருந்தகத்திற்கு முன்பாக குறித்த நபர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய கொலையாளி இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
