எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தையடுத்து, கடல்சார் பேரழிவால் ஏற்பட்ட சேதம் தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்காக, ஒரு குழு அடுத்த மாதம் சிங்கப்பூர் செல்லவுள்ளது என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த குழு சிங்கப்பூரில் உள்ள கப்பல் நிறுவனம் மற்றும் பிற பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தினால் கடல் சுற்றுசூழலுக்கு ஏற்பட்ட பேரழிவின் சேதத்திற்கான இழப்பீடு 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியிடப்பட்டதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.