அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அறிக்கையின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 297 ரூபா, 53 சதமாக இன்று பதிவாகியுள்ளது.
இதேவேளை, விற்பனை விலை இன்று 315 ரூபா 12 சதமாக பதிவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலரின் விற்பனை விலை 319 ரூபா 66 சதமாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.