புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் அடுத்த வாரம்

புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் அடுத்தவாரம் இடம்பெறும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 26 ஆம் திகதியுடன் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் சேவைக் காலம் நிறைவடையவுள்ள நிலையில் அவருக்கு அரசாங்கம் மூன்று மாத சேவை நீடிப்பை வழங்கியது.

இதன்படி, அடுத்த பொலிஸ்மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களான தேஷ்பந்து தென்னகோன், நிலந்த ஜயவர்தன, லலித் பத்திநாயக்க, பிரியந்த வீரசூரிய மற்றும் அஜித் ரோஹன ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதுடன், யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இதுவரை தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸி வினவிய போது, ​​பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படும் அதிகாரி தொடர்பில் ஜனாதிபதி வருகை தந்த பின்னர் அவருடன் கலந்துரையாடி ஒரு முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

பொலிஸ்மா அதிபர் பதவிக்கு ஜனாதிபதி செய்த பரிந்துரை அரசியலமைப்பு சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

தற்போதைய பொலிஸ்மா அதிபர். சி.டி.விக்ரமரத்ன இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபர் ஆவார்.

அவர் நவம்பர் 27, 2020 அன்று அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply