நடைமுறையாகிறது சாரதிகளுக்கெதிரான அதிரடி சட்ட நடவடிக்கை!

போதைப்பொருள் மற்றும் ஏனைய சட்ட விரோதமான பொருட்களை உபயோகித்து வாகனம் செலுத்துவோருக்கு எதிராக நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் நடவடிக்கையொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சட்ட விரோத பொருட்களை உபயோகித்துவிட்டு வாகனம் செலுத்வோரை கைது செய்வதற்கான நடவடிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாணத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான போதைப் பொருட்களை பாவித்து வாகனம் செலுத்திய 41 சாரதிகள் இனங்காணப்பட்டதாகவும் அவர்களில் 19 பேர் பேருந்து சாரதிகள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நாட்டில் அதிகளவு வீதி விபத்துக்கள், சட்டவிரோதமான போதைப் பொருட்களை பாவித்து வாகனங்களை செலுத்துவதனால் ஏற்படுவதாகவும், நாட்டில் பதிவாகும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2020ல் பதிவான 23,704 விபத்துகளில் 2,370 பேர் உயிரிழந்துள்ளனர், 2021ல் 22,847 சாலை விபத்துகளில் 2,559 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் ஜூன் 18ஆம் திகதி வரை பதிவான 8,875 சாலை விபத்துகளில் 1,043 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஜூன் 12ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் சட்டவிரோதமான பொருட்களை பாவிக்கும் சாரதிகளை அடையாளம் காணும் விஷேட நடவடிக்கையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், 1,781 பேர் சோதனையிடப்பட்டு 41 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சாரதிகளில் 09 முச்சக்கரவண்டி சாரதிகளும் 13 மோட்டார் சைக்கிள் சாரதிளும் அடங்குகின்றனர்.

குற்றமிழைத்த ஏழு சாரதிகள் விடுவிக்கப்பட்டதோடு, 15 சாரதிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் ஓட்டுநர் உரிமம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கடின உழைப்புடன் கைது செய்யப்பட்ட மேலும் இரு சாரதிகளுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply