ஓட்டுநர் உரிமத்தின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த வாரத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக DMD ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

காலாவதியான ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதில் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அச்சடிக்கும் அட்டைகள் பற்றாக்குறையினால் தற்காலிக ஓட்டுநர் உரிமங்கள் பாதுகாப்பு குறியீடு, ஒரு வருட செல்லுபடியாகும் காலத்துடன் வழங்கப்பட்டன.

இதனையடுத்து, காலாவதியான தாற்காலிக உரிமத்தை புதுப்பிப்பதில் மக்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு ஓட்டுநர் உரிமத்தின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு   நீடிக்க திணைக்களம் முடிவு செய்துள்ளது என அவர் தெரிவித்தார்.

ஓட்டுநர் உரிமத்திற்கான அட்டைகள் அச்சடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னமும் திணைக்களத்தால் 800,000 ஓட்டுநர் உரிம அட்டைகள் அச்சிட வேண்டியுள்ளது. தினசரி 4,000 அட்டைகள் அச்சிடப்பட்டு,  அச்சிடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply