வர்த்தகர் தினேஸ் ஷாஃபரின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பான அரசாங்க பகுப்பாய்வாளரின் அறிக்கைகளை பெற்றுக்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்ட பல இரத்த மாதிரிகள் உட்பட வழக்குடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கைகள் நீதிமன்றத்திற்கு இன்னும் கிடைக்கவில்லை என கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய குறிப்பிட்டார்.
இதனையடுத்து, அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் இருந்து இந்த அறிக்கைகளைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.
இதற்கிடையில், தேவைப்பட்டால், இந்த அறிக்கைகள் குறித்து அரசாங்க பகுப்பாய்வாளருக்கு நினைவூட்டல் அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மேலதிக நீதவான் தெரிவித்தார்.
மேலும்,தினேஷ் ஷாஃப்டரின்,மரணத்திற்கான காரணத்தை அறிய புதிதாக நியமிக்கப்பட்ட மருத்துவ நிபுணர்கள் குழு முன்னிலையில், உடல் சமீபத்தில் தோண்டியெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.