ஜப்பான் சென்றார் ஆளுநர் செந்தில் தொண்டமான்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், செந்தில் தொண்டமான் ஜப்பானில் மியாசாகி நாடாளுமன்ற உறுப்பினர் ஷிம்பே மட்ஷிதாவை சந்தித்து கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பது குறித்து கலந்துரையாடியுள்ளார்

இலங்கையின் நீண்டகால நண்பரான மியாசாகியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷிம்பே மட்ஷிதாவின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஜப்பான் நாடாளுமன்றத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்

ஜப்பானில் உள்ள மியாசாகி கடற்கரைக்கு செல்வோர், சிறிலங்காவின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள உலகத் தரம் வாய்ந்த உலாவல் இடங்களில் ஒன்றான அருகம்பே கடற்கரைக்கும் செல்வதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் ஆளுநர் செந்தில் தொண்டமான் இதன்போது முன்வைத்தார்.

இதன்போது அருகம்பே கடற்கரையை சர்வதேச உலாவர்களுக்கு ஊக்குவிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஷிம்பேய் மட்ஷிதா, கிழக்கு மாகாண ஆளுநரிடம் உறுதியளித்தார்.

மேலும் ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளுக்காக கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்தின் சுற்றுலாத் தளங்களை மேம்படுத்துவது குறித்தும் ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடினார்.

அதற்கும் ஷிம்பேய் மட்ஷிதா தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply