போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்வதை தடுக்குமாறு கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீளப்பெறப்பட்டுள்ளது.
அதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பெர்னாண்டோ கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி மே 26 அன்று தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை, பெர்னான்டோ தரப்பு சட்டத்தரணிகள் இன்று மீளப் பெற்றுக்கொண்டனர்.
குறித்த மனுவின் பிரதிவாதிகளாக காவல் கண்காணிப்பாளர் , குற்றப்புலனாய்வுப்பிரிவுக்கு பொறுப்பான இயக்குநர் மற்றும் குற்றப்புலனாய்வின் சைபர் கிரைம் பிரிவின் பொறுப்பாளர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தனது மனுவில், தன்னை கைது செய்யகுற்றப்புலனாய்வினர் மேற்கொண்ட முயற்சிகள் சட்டவிரோதமானவை என்றும், நாட்டில் உள்ள மத நல்லிணக்கத்திற்கு தனது கருத்துக்கள் அச்சுறுத்தல் என்பதை நிரூபிக்க பொலிஸார் எந்த ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் முன்வைக்கவில்லை என்றும் பெர்னான்டோ கூறியுள்ளார்.
பெர்னாண்டோ தனது பிரசங்கம் ஒன்றில் புத்த பகவான் மற்றும் பிற மத பிரமுகர்கள் தொடர்பான சில இழிவான அறிக்கைகளை வெளியிட்ட கானொளி சமூக ஊடகங்களில் பரவலாக பரவியதை அடுத்து இது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
T02