தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு கடந்த காலங்களில் பணப்பரிமாற்றம் செய்த இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை விற்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஊழல் ஒழிப்பு சட்ட மூலம் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதத்தின் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், தங்கத் திருடனை எப்படிப் பாதுகாத்து இந்தச் சபைக்கு அழைத்து வந்தார்கள் என்பதைப் பார்த்தோம். எனவே இன்று சட்டத்தைப் பற்றி பேசி பயனில்லை
இவற்றைச் செய்வதன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
மக்கள் உணவு, பானங்கள் இன்றி தவித்து வருவதோடு, இக்கட்டான சூழ்நிலையை மக்கள் புரிந்து கொண்டு வாழுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்நிலையில், பல்வேறு சட்டங்களை அரசாங்கம் கொண்டு வந்து மக்களை அடக்க முயற்சிக்கிறது. அதனைக் கொண்டு ஊடகங்களை பழிவாங்கவும் முயற்சிக்கின்றனர்.
இந்த நாட்டில் நீதித்துறை மிகவும் ஊழல் நிறைந்தது என்பதோடு, ஊழல் தடுப்பு மனுவை கொண்டு வர முயற்சிக்கின்றனர்.
இவர்கள் ஒரு ஹிட்லரைப் போலவே வாழ முயற்சிக்கின்றனர் எனவும் கடுமையாக சாடியுள்ளார்.