பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் சக்திகளை முறியடிப்போம் – உறுதியளித்த மோடி!

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்கா வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இரண்டு முறை உரையாற்றிய பிரதமர் என்ற பெமைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார் பிரதமர் மோடி.

அமிரிக்காவிற்கு சென்றுள்ள மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருதோடு, தலைவர்கள் பலரையும் சந்தித்து பேசிவருகிறார்.

எலான் மஸ்க்குடன் சந்திப்பு, ஜோ பைடன்- ஜில் பைடன் விருந்து என பல நிகழ்ச்சி நிரலில் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அங்கு அவர் உரையாற்றுகையில்,

“அமெரிக்க காங்கிரசில் இரண்டு முறை உரையாற்றுவது பாக்கியம், இதற்காக 1.4 மில்லியன் மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி, அதை ஊக்குவித்து ஏற்றுமதி செய்யும் அனைத்து சக்திகளையும் நாம் முறியடிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் இந்தியா- அமெரிக்காவின் உறவு சிறப்பாக இருந்தது, ஆனால் அதிக உயரத்துக்கு எடுத்துச்சென்ற பெருமை எங்கள் தலைமுறையினருக்கு உண்டு.

இது ஒரு பெரிய நோக்கத்திற்கான சேவை என்பதால், இதனை வரையறுக்கும் கூட்டாண்மை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

இந்தியாவும், அமெரிக்காவும் பலவற்றில் இணைந்து செயல்படுகின்றன, நவீன இந்தியாவில் பெண்களால் நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

பழங்குடியின பின்னணியில் இருந்து வந்த பெண் இந்தியாவில் மிக உயர்ந்த பதவியை வகிக்கிறார்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 20 வெவ்வேறு கட்சிகள் ஆட்சி செய்கின்றன, 22 அதிகாரப்பூர்வ மொழிகளும் உண்டு” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply