களுத்துறையில் 16 மாணவிகள் வன்புணர்வு – சந்தேக நபர் மீண்டும் விளக்கமறியலில்!

பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

களுத்துறையில் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஒருவரை எதிர்வரும் ஜூலை 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சந்தேகநபர் கடந்த மே 11ஆம் திகதி களுத்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்கும் பணியகத்திற்கு வந்து வாக்குமூலமொன்றை பதிவு செய்த போதே அவர் கைது செய்யப்பட்டார்.

தனது கணவர் திருமணத்திற்குப் புறம்பான உறவில் ஈடுபட்டதாக களுத்துறை வடக்குப் பொலிஸில் ஆசிரியரின் மனைவி முறைப்பாடு செய்ததையடுத்து சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply