ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பாரிஸில் நடைபெற்று வரும் புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டின் நேற்று வெள்ளிக்கிழமை (23) இரண்டாம் நாள் அரச தலைவர் அமர்வின்போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரு நாட்டு தலைவர்களும் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்.
அத்தோடு ஐ.நா. செயலாளர் நாயகம், அமெரிக்க திறைசேரி செயலாளர், பொதுநலவாய நாடுகளின் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இராஜதந்திரிகளையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.